மெட்ரோ இரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் பகுதி திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்த வாகன நிறுத்தும் பகுதியில் 450 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கரவாகனங்களை நிறுத்த முடியும்.
தற்போதுள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையவாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்த கூடுதல் வாகன நிறுத்தும் வசதி மூலம் கூடுதலாக வாகனங்களை நிறுத்த முடியும்.
இந்த வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இன்று (27.08.2024) திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் திரு. எஸ். சதீஷ் பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

