Monday, April 13, 2026
HomeUncategorizedசெங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் திருச்சி வழியே இயக்கப்படும்

செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் திருச்சி வழியே இயக்கப்படும்

மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில், அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், திருச்சி வழியே இயக்கப்படும்

குருவாயூர் – சென்னை விரைவு ரயில் செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி வழியாக இயக்கப்படும்

ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்

செங்கோட்டையிலிருந்து ஈரோடுக்கு செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments