Tuesday, April 21, 2026
HomeUncategorizedசென்னை - செங்கோட்டை இடையே குளிர்சாதன சிறப்பு ரயில்

சென்னை – செங்கோட்டை இடையே குளிர்சாதன சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை இடையே அரக்கோணம், காட்பாடி (வேலூர்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக குளிர்சாதன சிறப்பு ரயில்.

வண்டி எண் 06005 சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில், அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு முறையே மறுநாள் காலை 9.20க்கு செங்கோட்டை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7ம் தேதிகளில், வண்டி எண் 06006 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இரவு 7.30க்கு புறப்பட்டு முறையே மறுநாள் காலை 9.30க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் திருவள்ளுர், அரக்கோணம், காட்பாடி(வேலூர்), ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை நோக்கி பயணிக்கும் போது பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments