Saturday, March 21, 2026
HomeUncategorizedசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

 அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகளான எஸ்.அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மூல மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள்.

2 மாதம் தொடர்ந்து நடைபெறும் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 26- ந் தேதி மண்டல பூஜையும், முத்தாய்ப்பு விளக்கு பூஜையும் நடைபெறும். மண்டலபூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு 85 சதவீதம் முடிவடைந்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70,000 பக்தர்களும், உடனடி தரிசன முன் பதிவின்படி 10,000 பக்தர்கள் என தினமும் 80,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்ஆ சன்னிதானம் பகுதியில் தந்திரியின் உத்தரவின் பேரில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.” .

அதேபோல்  பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர  தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது. 

மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள்  ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை போட்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

 சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments