Saturday, March 14, 2026
HomeUncategorizedமாற்றம் தரும் மார்கழி மாதம் பிறந்து விட்டது

மாற்றம் தரும் மார்கழி மாதம் பிறந்து விட்டது

உச்சி முதல் பாதம் வரை உடலை உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாதமாக மார்கழி மாதம் உள்ளது .

ஆண்கள் மாலை அணிந்து அசைவம் தவிர்த்து விரதம் மேற்கொள்வார்கள். அதே போல் பெண்கள் அதிகாலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் வீட்டு வாசலில் கோலம் இடுவார்கள். இவ்வாறு அரிசிமா கோலம் போட்டு சிறு உயிர்களுக்கு உணவளிப்பதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் திருமண தடை ,தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அதிகாலையில் மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக இருப்பதால் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும்.

இந்த குளுமையான சூழ்நிலையில் எழுந்து பக்தி செய்யும்போது பல கோடி மடங்கு நன்மை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திரு பள்ளி எழுச்சி படிப்பது மிக சிறப்பாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments