Sunday, March 15, 2026
HomeUncategorizedமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வரப் பெற்றுள்ள புகார் : சுத்தமல்லி போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை

மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வரப் பெற்றுள்ள புகார் : சுத்தமல்லி போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வரப் பெற்றுள்ள புகார் தொடர்பாக BNS 271,272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் அந்த கழிவுகள் ஆய்வுக்கு  உட்படுத்திடவும் தகுந்த முறையில் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையால் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அரசின் உத்தரவுகள்படி, குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை

இதன் படி சுத்தமல்லி போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments