Sunday, March 22, 2026
HomeUncategorizedநுற்றாண்டு பூங்காவின் கட்டணத்தை குறைக்கக் கோரிக்கை

நுற்றாண்டு பூங்காவின் கட்டணத்தை குறைக்கக் கோரிக்கை

மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. 50 வகையான மலர்களுடைய 30 லட்ச மலர் தொட்டிகள் கண்காட்சிக்காக வைக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலர்களை கொண்டு யானை, மயில், ரயில், ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, அன்னப்பறவை, நடனமங்கை என 20 வகையான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இன்று தொடங்கி வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சியில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகப்படியான கட்டண நிர்ணயம் தான் தற்போது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

முதல் முறையாக நடைபெற்ற மலர் கண்காட்சியை பார்வையிட 44 ஆயிரத்து 888 பேர் குவிந்தனர். இரண்டாவது மலர் கண்காட்சியை பார்வையிட 23 ஆயிரத்து 302 பேர் மட்டுமே வந்தனர்.

ஆனால், கடந்த முறை கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர். குறைந்த நுழைவு கட்டணமும் அதிகப்படியான மக்கள் குவிய காரணமாகும்.

ஆனால், இந்த முறை அதிகப்படியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, செம்மொழிப் பூங்காவிற்கு எதிராக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான, நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், சாதாரண மக்கள் குடும்பமாக அங்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணம் நிர்ணயித்தால் அங்கு சராசரி மக்கள் யார் வருவார்கள்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

கட்டணத்தை குறைத்தால் பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பார்கள் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments