திருவையாறு மகா கும்பாபிஷேகம் ஐந்து யானைகளின் மீது காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு பூலோக கயிலாயம் ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
தருமையாதீன 27வது ஸ்ரீலஸ்ரீ கயிலை_குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் சிவகண வாத்தியங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க, கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம் போன்ற பல்வேறு கிராமிய வாத்தியங்களுடன் வாணவேடிக்கைகள் விண்ணதிர நான்கு இராஜ வீதிகளில் ஐந்து யானைகள் மீது காவிரியில் தீர்த்தம் கொண்டு வருதல் நடைபெற்றது!!!

