Wednesday, March 4, 2026
HomeUncategorizedவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவானது.

அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஏப்., 12ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கும் நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 10ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் ஆந்திரா, ஒடிசா வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், ஏப்., 10ம் தேதி வரை, அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments