Thursday, February 5, 2026
HomeUncategorizedபிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!

பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ஆனால் பிச்சைக்காரன் முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் சொல்லும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

பிச்சைக்காரன் வெற்றிக்கு  பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி மீண்டும் இணைந்து பணியாற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக சுவாசிகா நடிக்க உள்ளார். இந்த கூட்டணி ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments