Saturday, March 21, 2026
HomeUncategorizedமாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? அட! இது தெரியாம போச்சே!

மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? அட! இது தெரியாம போச்சே!

மாங்காய் அனைவராலும் விரும்பப்படும் உணவு பொருளாகும். இந்த மாங்காயில் உள்ள மருத்துவ குணங்களை இப்பதிவில் காண்போம். வெயில் காலங்களில் மட்டும் கிடைக்கும் மாங்காய்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. மாங்காயை பல விதமான உணவுகளில் பயன்படுத்துவது வழக்கம், ஆனால் அதன் மருத்துவ குணங்கள் அறிந்து கொள்வது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

பச்சை மாங்காய் மருத்துவ குணங்கள்

பொதுவாக, பச்சை மாங்காய்களை பிஞ்சு, காய், செங்காய், பழம் என பிரித்து உண்கிறோம். பிஞ்சு மற்றும் காய் மாங்காய்களை ஊறுகாய் செய்து உண்ணுவதுண்டு. மாங்காய் குழம்பு, பொரியல், கூட்டு, சாதம் என பல உணவுகளில் பயன்படுகிறது. மாங்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. ஆன்டிஆக்சிடென்ட்கள், மெக்னீசியம், அவசியம் போன்ற தாதுப் பொருட்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதனால் இருதய நோய் பாதிப்புகள் ஏற்படாது. மாங்காயை உணவில் சேர்ப்பதின் மூலம் குழந்தைகளின் பார்வை திறன் அதிகரிக்கும்.

முகப்பொலிவு

மாங்காயை தொடர்ந்து உண்ணும் போது, சருமம் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறும். சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் குறையும். கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஆகியவற்றை மாங்காய் மூலம் சரி செய்யலாம்.
 மாங்காயை உண்ணும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் ஆசிட் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும், இது வளரும் குழந்தைகளுக்கும் நல்ல ரத்த ஓட்டத்தை அளிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும். வெள்ளை ரத்த அணு குறைபாடு உள்ளவர்கள் மாங்காயை உண்ணும் போது, அவர்களின் ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

 மாங்காயில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற அஜீரணம் சம்பந்தமான ஜீரண மண்டல கோளாறுகள் அனைத்தும் தீரும். மாங்காய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவுகளை குறைத்து உடலில் நல்ல கொழுப்பு அளவை மெயின்டைன் செய்து கல்லீரலில் செயல் திறனை அதிகரிக்கும். தலைமுடி உதிர்வதை குறைத்து நல்ல தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரித்து அடர்த்தியான தலைமுடி வளர மாங்காய் உதவியாக இருக்கும்.

 நம் உணவே மருந்தாக பயன்படுத்தும் பலவிதமான உணவுப் பொருட்களில் மாங்காயும் மிகச்சிறந்தது. அதன் மருத்துவ குணத்தையும் பதிவில் நாம் படித்த பின் கண்டிப்பாக மாங்காயை உணவில் சேர்த்துக் கொள்வோம் நோயின்றி வாழ்வோம்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments