Saturday, March 7, 2026
HomeUncategorizedபுலியுடன் செல்ஃபி எடுக்க ஆசை! இந்திய சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட கதி!

புலியுடன் செல்ஃபி எடுக்க ஆசை! இந்திய சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட கதி!

இந்தியர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் பல சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது தாய்லாந்து. தாய்லாந்தில் ஃபூக்கெட் என்னும் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுடன் செல்ஃபி எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.  அங்கு இருக்கும் விலங்குகளும் பயிற்சியாளர்கள் சொல்வதை கேட்டு அவ்வாறே நடக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சுற்றுலா பயணி ஒருவர் புலியுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு புலியுடன் நடந்து வருகிறார். அதுவரை அமைதியாக இருந்த புலி அவர் பக்கத்தில் அமர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சி செய்யும்போது கோபமடைந்து அவரை தாக்க தொடங்குகிறது. 

புலி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்ததாக கூறுகின்றனர். அவர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த இணையதளவாசிகள் பொதுவாக புலிகளுக்கு கழுத்து பகுதிகளிலும், தன் உயரத்திற்கு கீழே மனிதன் இருந்தால், புலிகளுக்கு பிடிக்காது என்றும், அது தாக்கக் கூடியதாக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த சுற்றுலா பயணி புலியின் வயிற்றை தொட்டதால் தான் புலிக்கு கோபம் வந்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments