Thursday, February 5, 2026
HomeUncategorizedவீட்டில் பல்லி தொல்லை தாங்கலயா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

வீட்டில் பல்லி தொல்லை தாங்கலயா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

வீடுகளில் அதிகமாக காணப்படும் பல்லிகள் நேரடியாக நமக்கு தொந்தரவு கொடுக்கவில்லை என்றாலும் அதை பார்த்தாலே ஒரு அருவருப்பும், பயமும் அனைவருக்கும் ஏற்படும். சிலர் அதை அடித்து துரத்தி விடுவர். ஆனால் சிலரோ பல்லியை மகாலட்சுமி என்று சொல்லி அப்படியே விட்டு விடுகின்றனர். அதை துரத்துவதற்கு என்னதான் செய்தாலும் மறைவான பகுதிகளில் ஒளிந்து கொண்டு மீண்டும் வெளியே வந்து, வீட்டு சுவர்களில் சுற்றி திரியும். அதைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு விதமான அருவருப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். 

இரவில் பல்லிகளின் சத்தம் நம்மை தூங்க விடாமல் செய்கிறது, சிலருக்கு அது எரிச்சலையும் தருகிறது. உங்கள் வீட்டில் பல்லிகளை விரட்ட பல முயற்சிகளை செய்தும் முடியாமல் போனால் கவலைப்படாதீர்கள். இப்போது பல்லிகளை விரட்டுவது எப்படி என்பதை இந்த பதிவில் அறியலாம்.

1. பூச்சிகளைப் பற்றி பயப்படும் நபர்கள் நம்மில் பலர் உள்ளனர், குறிப்பாக பல்லிகளைக் கண்டால் பலர் பதற்றமடைந்து அலறுவார்கள். எனினும், அந்த பல்லிகள் வீடுகளில் சுவர்களில் தென்படும்போது பயமும் சலிப்பும் ஏற்படுத்துகின்றன.

2. இதனை வீட்டிலிருந்து விரட்ட வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் உள்புற சுவர்களையும் தரையையும் பாக்டீரியா எதிர்ப்பு கரைசலால் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல்களையும் மூலைகளையும் தூய்மையாக வைக்க வேண்டும்.

3. காபி மற்றும் புகையிலை தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, அந்த கட்டிகளை சுவர்களில் ஒட்டவும். மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்தும், அவற்றை வீட்டின் சுற்றிலும் வைக்கவும். கர்ப்ப காலத்தில் சரும பிரச்சனைகளுக்கு சில டிப்ஸ் உள்ளன.

4. வெங்காயத்தின் கடுமையான வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது . வெங்காயத்தை வெட்டியோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் விலகிவிடும். வெங்காய தோல்களை ஜன்னல்களிலும் மூலைகளிலும் வைத்தால் போதும். நாப்தலீன் பந்துகளின் வாசனையிலிருந்தும் பல்லிகள் ஓடுகின்றன, அவற்றை வீட்டில் வைப்பது நல்லது. 

5. பிரியாணி இலையை எரித்து, அந்த புகையை வீடு முழுவதும் பரவ செய்ய வேண்டும். பல்லிகள் அந்த வாசனையை விரும்பவில்லை. வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படாமல் கவனிக்கவும், அவை பல்லிகளுக்கு இடமாக இருக்கும். சுவர்களுக்கு எதிரே மரச்சாமான்களை வைக்காமல், 6 அங்குல இடைவெளியை விட்டு வைக்கவும்.

6. மயில் இறகுகள் பல்லிகளை அச்சுறுத்தும் என்பதால், அவற்றை வீட்டில் வைத்துக்கொண்டால் பல்லிகள் அந்த பகுதியை அணுகாது. 

7.காபி மற்றும் தக்காளி பொடியை நீரில் கலந்து பேஸ்ட் ஆக்கி அதை வைத்தால், பல்லிகள் அங்கு வருவதில்லை.

8. நாம் உண்டு வீசிய முட்டை ஓடுகளை வைத்தால், அந்த இடங்களில் பல்லிகள் வராது. அந்த வாசனையை பல்லிகள் வெறுக்கும், அதனால் வீட்டை விட்டு தப்பிச் செல்லும்.

9.கற்பூரவல்லி இலைகளின் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. அதனால், அந்த இலைகளை எரித்து அதன் புகையை வீட்டில் பரப்பினால், பல்லிகள் தொல்லை ஏற்படுத்தாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments