நாட்டில் சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய எச்சரிக்கையை சமூக வலைதளமான X இல் வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் நம்பவேண்டிய அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. வங்கி அதிகாரிகள் பெயரில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
SBI வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, +91 1600 தொடங்கும் எண்கள் மட்டுமே பாதுகாப்பானவை. வாடிக்கையாளர்கள் அந்த எண்களிலிருந்து வரும் அழைப்புகளையே நம்ப வேண்டும். பிற எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளில் OTP, PIN, வங்கி விபரங்கள் போன்றவற்றை பகிரக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி முயற்சிகள் குறித்த தகவலை வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல்களுக்கு புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களுக்கிணங்க, அனைத்து வங்கிகளும் +91 1600 தொடங்கும் எண்கள் மூலமே வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் SBI வெளியிட்ட சரிபார்க்கப்பட்ட எண்கள்:
இவை: 1600-01-8000 1600-01-8001 1600-01-8002 1600-01-8003 1600-01-8004 1600-01-8005 1600-01-8006 1600-01-8007 1600-11-7011 1600-11-7012 1600-11-7013 1600-11-7015 1600-01-7014 1600-00-1351 1600-10-0021 இந்த எண்கள் தவிர வேறு எந்த எண்ணிலிருந்தும் வரும் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, இந்த தகவலை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர SBI கேட்டுக்கொண்டுள்ளது.

