Sunday, March 22, 2026
HomeUncategorizedஇசைஞானியை சந்தித்ததே வாழ்நாள் பாக்கியம்! பாஜக அண்ணாமலை நெகிழ்ச்சி!

இசைஞானியை சந்தித்ததே வாழ்நாள் பாக்கியம்! பாஜக அண்ணாமலை நெகிழ்ச்சி!

கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா கோவை வந்துள்ளார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் ரோட்டரி கிளப் சார்பில் இளையராஜாவிற்கு விருதுகள் அளிக்க வழங்கப்பட்டது.

அப்போது பேசிய இளையராஜா கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு ஹார்மோனியம் வாசிக்காத இடங்கள் இல்லை. நான் வைத்திருக்கும் ஹார்மோனியம் கூட கோவிலில் செய்யப்பட்டது தான் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் எப்போதும் கோவையையும் என்னையும் பிரிக்கவே முடியாது என்று கூறினார்.

 இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இசைஞானி இளையராஜாவை சந்தித்து சால்வை அணிவித்தார். இளையராஜாவை கண்டவுடன் அண்ணாமலை நிகழ்ச்சி அடைந்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறினார். இது தொடர்பாக எக்ஸ் X தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் திரு.இளையராஜா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது.” என்று பதிவிட்டுள்ளார். 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments