Monday, March 23, 2026
HomeUncategorizedபாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்! லிஸ்ட் பெருசா இருக்கே!

பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்! லிஸ்ட் பெருசா இருக்கே!

சில இடங்களுக்கு நாம் அடிக்கடி செல்வோம். சிலசமயங்களில் எத்தனை முறை ஒரே இடத்திற்கு சென்றாலும்  நமக்கு சலிக்கவே சலிக்காது. அப்படிபட்ட ஒரு இடம் தான் பாண்டிச்சேரி. பாண்டிச்சேரியில் காண வேண்டிய சுற்றுலா தளங்களைப் பற்றி இப்போது அறிவோம்.

பாரடைஸ் பீச்

படகு சவாரி செல்ல ஆர்வமுள்ளவர்கள் பாரடைஸ் பீச்சை நோக்கி செல்லலாம். இந்த பீச் கண்கவர் அழகுடன் கூடியதும், நன்றாக பராமரிக்கப்பட்டதும் ஆகும். இங்கு புகைப்படம் எடுக்க ஏற்ற இடமாகும். 

பிரஞ்சு காலனி

பாண்டிச்சேரியின் பிரஞ்சு காலனி பார்வையாளர்களை மிகவும் கவரும். பிரஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட இந்த காலனி, வேறொரு நாட்டில் இருப்பது போன்ற அனுபவத்தை தரும். இங்கு போட்டோ ஷூட் மற்றும் ஹோட்டல் வசதிகளும் உள்ளன. ஒரு நாள் தங்குவதற்கான வாடகை 5000 முதல் 8000 ரூபாய் வரையும், போட்டோ ஷூட் மட்டும் எடுக்க 400 முதல் 500 ரூபாய் வரையும் ஆகும். பாண்டிச்சேரிக்கு வரும்போது இந்த இடத்தை மறக்காமல் பார்க்கவும்.

ராக் பீச்

கடல் அழகை ரசிக்க விரும்புபவர்கள் ராக் பீச்சுக்கு செல்லலாம். அமைதியான சூழல் மற்றும் சுற்றிலும் உள்ள காட்சிகள் உங்கள் சுற்றுலாவை இனிமையாக்கும். உணவகங்களும் அருகில் உள்ளன.

ஈடன் பீச்

பாண்டிச்சேரியில் மக்கள் கூட்டம் குறைவான தனித்துவமான கடற்கரைகளில் ஈடன் பீச் ஒன்றாகும். இந்த பீச் சுற்றுலா வருபவர்களுக்கு தனிமையான அனுபவத்தை அளிக்கும்.

மாட்ரிமந்திர்

பாண்டிச்சேரியில் சிறப்புமிக்க சுற்றுலா இடங்களை ஆன்லைனில் தேடும்போது, ‘கோல்டன் குளோப்’ என்ற இடம் கண்டிப்பாக கவனத்திற்கு வரும். ‘கோல்டன் குளோப்’ என்பது மாட்ரிமந்திர் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் பாண்டிச்சேரியில் அதிகமான மக்கள் பார்வையிடும் இடமாக உள்ளது. இந்த இடத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், பாண்டிச்சேரிக்கு சென்றால் அவசியம் பார்வையிடுங்கள். 

அதுமட்டும் இல்லாமல் மணக்குள விநாயகர் கோவில், ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், பாரதியார் வாழ்ந்த வீடு  உள்ளிட்ட பல இடங்கள் இங்கு உள்ளது. இவையனைத்தும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்றாக மட்டும் இல்லாமல் உங்கள் பயணத்தை சிறப்பு மிக்கதாகவும் மாற்றும். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments