அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் விமானத்தில் இருந்த ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார்.
விழுந்து நொறுங்கி வெடித்த விமானத்திலிருந்து உயிர் பிழைத்த அந்த ஒரேயொரு அதிசயப் பயணி அமர்ந்து இருந்த இருக்கை… 11A. ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11A இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலது பக்கத்தில் உள்ளது. விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே 11A இருக்கை அமைந்துள்ளது.
விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார் விஷ்வாஸ் குமார் ரமேஷ். அவரின் சகோதரர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பிறந்து பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்து… உறவினரை சந்தித்துவிட்டு லண்டன் திரும்பினாராம்.

விபத்து நடப்பதற்கு சில வினாடிகள் முன்பாக பயணிகளுக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரமேஷ் விஸ்வக்குமார் பதற்றம் கொள்ளாமல் தயாராக இருந்துள்ளார். சீட் பெல்ட்டை கழற்றிய அவர், விமானம் தரையில் அருகே வந்த போது சரியான நேரத்தில் சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அங்கிருந்து குதித்துள்ளார். இதன்பின் அங்கிருந்து காயங்களோடு ஆம்புலன்ஸை நோக்கி ஓடிய அவர், அங்கிருந்தவர்களிடம் மற்ற பயணிகள் குறித்து விசாரித்தார்.
இதனிடையே ரமேஷ் விஸ்வக்குமார் பயணித்த 11ஏ இருக்கை குறித்த விவாதம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் விமானத்தில் பயணிப்பவர்கள் 11ஏ இருக்கையை எப்போதும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் விமானம் தரையிறங்கிய பின், அதில் இருந்து கடைசியாக வெளியேறும் பயணியாக 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர்களே வருவார்கள்.
அதேபோல் விமான இறக்கைகளுக்கு அருகில் இருக்கும் என்பதால், மேக கூட்டங்களை கூட சரியாக பார்க்க முடியாது. அதேபோல் ஜன்னலும் வட்ட வடிவில் இருக்கும். அதனால் கிட்டத்தட்ட ஜன்னலே இல்லாத இருக்கையை போன்ற சூழல்தான். இதனால் 11ஏ இருக்கையை விமானத்தில் பயணிப்பவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த பயணி மட்டுமே உயிர் பிழைத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. ஒரே நாளில் உலகிலேயே அதிகம் வெறுக்கப்பட்ட விமான இருக்கையில் இருந்து, அதிகம் பேசுபொருளாகவும், விருப்பமான இருக்கையாகவும் 11ஏ மாறி இருக்கிறது.

