அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 270 யை கடந்துள்ளது. இன்னும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் பயணித்த 241 பேர், விடுதியில் உணவு சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் என்று மொத்தம் 270 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் இருந்து ஏர் இந்தியா போயிங் 787-8 (VT-ANB) விமானத்தின் பின்புற பகுதியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடத்தில் ஒப்படைப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வந்தது. தற்போது அந்த பரிசோதனை முடிவடைந்து. விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 80 பேரின் உடல்கள் DNA பரிசோதனை மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், 33 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

