Thursday, February 5, 2026
HomeUncategorizedவிஞ்ஞானி நெல்லை திரு.சு.முத்து உடல்நல குறைவால் காலமானார்! அப்துல் கலாமுடன் பணியாற்றியவர்!

விஞ்ஞானி நெல்லை திரு.சு.முத்து உடல்நல குறைவால் காலமானார்! அப்துல் கலாமுடன் பணியாற்றியவர்!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து இன்று காலமானார். விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமான நிலையில் அவரது உடல் மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

-டிடிவி தினகரன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments