Sunday, March 22, 2026
HomeUncategorizedஇந்தியாவில் பல்வேறு இடங்களில் விமானங்களில் கோளாறு - பயணிகள் அச்சம்

இந்தியாவில் பல்வேறு இடங்களில் விமானங்களில் கோளாறு – பயணிகள் அச்சம்

கோளாறு : 1

நடுவானில்  இயந்திரக் கோளாறு –  தரையிறங்கிய பிரிட்டிஷ் விமானம்.*

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட  இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.

இதனால் லண்டன் – சென்னை, சென்னை – லண்டன் செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

விமானங்கள் ரத்து காரணமாக700க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு.

 

கோளாறு – 2

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

நடுவானில் பறந்தபோது விமானி தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில் மீண்டும் ஹாங்காங் திரும்பியது; 

கோளாறு ஏற்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானத்தை பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

கோளாறு – 3
 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சர்வதேச விமான நிலையத்தில் இன்று   சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான  விமானம் தரையிறங்கியது. 

 அப்போது, இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து விமானத்தை உடனடியாக விமானி நிறுத்தியுள்ளார்.  தொடர்ந்து விமானத்தில் இருந்த 250 ஹஜ் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கோளாறு –  4

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம் மீண்டும் திரும்புவதில் தாமதம் .

 தொழில்நுட்ப காரணங்களால் போர் விமானம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல். .

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments