Wednesday, February 4, 2026
HomeUncategorizedஆச்சரியமூட்டும் அத்தி காயும்- அதன் பயன்களும்!

ஆச்சரியமூட்டும் அத்தி காயும்- அதன் பயன்களும்!

அத்திப்பழம் உலகில் மிகவும் நன்மை தரும் பழங்களில் ஒன்றாகும். மனித இனம் நாகரிகமாக மாறும் முன்பே அத்திப்பழம் உணவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்திப்பழத்தை பிஞ்சு, காய் அல்லது பழமாக உணவில் சேர்க்கலாம், இது பல நன்மைகளை தரும்.

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்:

அத்திப்பழம் துவர்ப்பு சுவையுடையது, அதில் அதிக அளவிலான சத்துக்களும் புரதங்களும் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன. உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
மலச்சிக்கல், பெண்களின் வெள்ளைப்படுதல், கருமுட்டை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு மருந்தாகும். ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ரணங்களை ஆற்றும். வாய், குடல், வயிற்றுப் புண்களை தடுக்கும்.
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

அத்திப்பழம் உணவு:

இயற்கையாக விளைந்த, ரசாயனம் இல்லாத அத்திப்பழங்களை வாங்கி, நான்கு துண்டுகளாக வெட்டி, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு தேய்த்து கழுவி, அதில் உள்ள விதைகளையும் பூச்சிகளையும் நீக்கி, துவரம் பருப்பு அல்லது சிறு பருப்பு சேர்த்து கூட்டு அல்லது பொறியலாக சமைத்து உண்ண வேண்டும். இதன் முழு ஆரோக்கிய பலன்களை அடையலாம்.

 

அத்திப்பழம்:

தற்போது பிரபலமாகும் உலர் பழ வகைகளில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை பழமாகவோ உலர் பழமாகவோ உண்ணும் போது, உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும், ரத்த சோகை நீங்கும், ரத்த அழுத்தம் சீராகும், செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளின் ரத்த சக்கர அளவு சீராகும், மலச்சிக்கல் நீங்கும். உலர்ந்த அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் உண்ணும் போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். அத்திப்பழத்தை தொடர்ந்து உண்ணும் போது, பெண்களின் கருபப்பை கோளாறுகள் சரியாகும் என கூறப்படுகிறது  , ஆண்களுக்கு ஆண்மை பலம் கூடும். நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ரசாயனமில்லாமல் விளையக்கூடிய அத்தி காய்களையும் பழங்களையும் முறையாக உணவில் பயன்படுத்தி வந்தோமானால் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் நோய்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments