போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், தான் தவறு செய்து விட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உள்ளது என்று கூறியதுடன், தனக்கு ஜாமீன் வழங்கும் படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கை பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொகைன் பழக்கத்தை கற்றுத் தந்ததாகவும், ஒரு படத்திற்காக பிரசாத் தனக்கு 10 லட்சம் தர வேண்டி இருந்ததால், பணத்தைக் கேட்கும் போதெல்லாம் கொகைன் வாங்கிக் கொடுத்ததாகவும் ஸ்ரீகாந்த் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இரண்டு முறை பயன்படுத்திய பின்னர் மூன்றாவது முறை தானே கேட்கும் நிலை ஏற்பட்டதாகவும் பேசி உள்ள ஸ்ரீகாந்த் தவறு செய்து விட்டதை உணர்ந்ததாகவும், தனக்கு ஜாமீன் வழங்கும் படியும் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

