Thursday, February 5, 2026
HomeUncategorized14 மருந்துகளுக்கு தடை- கர்நாடக சுகாதாரத் துறை அறிவிப்பு!

14 மருந்துகளுக்கு தடை- கர்நாடக சுகாதாரத் துறை அறிவிப்பு!

Pomol-650 (பாரசிட்டமால்) உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட மருந்துகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. ஆய்வுகளின் முடிவில் ஆபத்தான மருந்துகள் என 14 மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த 14 மருந்துகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவில் இந்த மருந்துகள் ஆபத்தானவை என்றும், மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மருந்தின் கலவை, பக்க விளைவுகள் மற்றும் நோயாளிகளின் உடல் நலன் மீதான அதன் தாக்கம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆராயப்பட்ட பின்னரே இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எந்தெந்த குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டன என்பது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments