திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகம் வருகை தந்துள்ள மகாராஷ்டிரா மாநில ஆளுநர் திரு. CP.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று, கருணைக்கடலான கந்தனை தரிசித்தேன்.
மக்கள் நலமுடன் இருக்க முருகன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினேன். அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினோம்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் திரு.R.சித்ரங்கநாதன் அவர்களும், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர், திரு. பொன் V பாலகணபதி அவர்களும், மற்றும் பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தார்கள்.
– மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்

