உலகில் ஆண்டுக்கு 40 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த மக்காத பாலிதீன் பைக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள்…
இவை எளிதில் மட்கும் தன்மை கொண்டவை, 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை. பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில் , காகிதப் பைகள் உயிரினங்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பைகள் மட்கும் தன்மை கொண்டதால், உயிர் உரம் தயாரிக்க உதவுகிறது.
காகிதப் பைகளின் தீமைகள்…
காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். பால் போன்ற திரவப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாது. உறைய வைக்கும் உணவை காகிதப் பைகளில் எடுத்துச் செல்ல முடியாது. கனமான உணவு மற்றும் மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்வது கடினம்.

