ஈரோட்டில் காமராஜ் என்பவரின் வீட்டில் பயன்படுத்தாத AC-யில் இருந்து கடந்த 10 நாட்களாக வித்தியாசமான சத்தம் வந்துள்ளது.
கண்டுகொள்ளாமல் இருந்தபோது, ஒருநாள் AC-யில் இருந்து செத்துப்போன எலி ஒன்று கீழே விழுந்துள்ளது. அப்போது பாம்பின் வால் பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர்கள், பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஏசியில் பதுகியிருந்த 6 அடி சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையின் மூலம் காப்புக் காட்டில் விடுவித்துள்ளார்.
மழைக் காலம் என்பதால் ஏசி பயன்படுத்தாத நிலையில், வெளிப்புற குழாய் வழியாக எலி வரும் பொழுது அதனை பின்தொடர்ந்து பாம்புகளும் இதுபோன்று ஏசியில் வந்து பதுங்கி விடுவதாக பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.

