புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் பொன் பெருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியானது 23- 7- 2025 அன்று (புதன் கிழமை ) “மாணவர் அரங்கம்”, மற்றும் “கவியரங்கம்” என இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
முதல் அமர்வான மாணவர் அரங்கத்திற்கு “இளம்பாரதி” திருச்சி.வீ.வீரபாலாஜி நடுவராக பொறுப்பேற்றார். அரங்கமானது “கம்பன் காப்பியம் நமக்குத் தரும் செய்தி பணிவின் பெருமையா? துணிவின் திறமையா? என்கிற பொருளில் நடைபெற்றது. “பணிவின் பெருமையே” அணியில் அ.அர்ச்சனா தேவி, செ.சுருதி கங்கா, சா.தா.ரம்ஜான் பேகம், மு.சப்ரின் அன்சர்
ஆகியோரும், “துணிவின் திறமையே” அணியில் கு.புவனேஸ்வரி, மு.அனிஸ் பாத்திமா, மு.கல்பனா தேவி, வே.நந்தினி
ஆகியோரும் திறம்பட வாதிட்டனர்.
பாரதி கல்லூரிகளின் மேலாண்மை இயக்குனர் திரு.குரு. தனசேகரன் தலைமையேற்க, திரு. பி.வி.ஆர்.சேகரன், டாக்டர்.கே.ஹெச்.சலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திரு.லியோ பெலிக்ஸ் லூயிஸ், திரு. ந.கனகராஜ், திரு.அ.கிருஷ்ண மூர்த்தி, திருமதி.எஸ்.திலகவதி, திரு.அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ பாரதி கலைக்கல்லூரியின் முதல்வர். முனைவர்.செ.கவிதா வரவேற்புரையும், முனைவர். மு.கீதா ஆகியோர் நன்றியுரையும் ஆற்றினர்.
இரண்டாம் அமர்வு ஆர்.எம்.வீ கதிரேசன் அவர்களின் வரவேற்பு கவிதையுடன் தொடங்கியது.
நகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.ரா. ராஜசேகர் வாழ்த்துக் கவிதை பாடினார்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீ புவனேஸ்வரி நகை மாளிகை திரு சோம நடராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
” நமது நம்பிக்கை ” ஆசிரியர் “கலைமாமணி” மரபின் மைந்தன் திரு. ம. முத்தையா அவர்களின் தலைமையில் “கம்பனின் நாம் கடக்க முடியாத காலம்” என்கிற பொருளில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் விவேக் பாரதி , கவிஞர். சே. சுந்தரம், கவிஞர் பாம்பன். மு .பிரசாந்த், கவிஞர் ரத்னா வெங்கட், கவிஞர் தஞ்சை இனியன், கவிஞர் பத்மன் ஆகியோர் தனித்தனி தலைப்புகளில் கவிதைபாடினர்.
விழா குழு உறுப்பினர் கவிஞர் நிலவை. பழனியப்பன் நன்றிக் கவிதை வாசித்தார்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இரண்டு அமர்வுகளையும் புதுகை ச. பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
” தெய்வத்தமிழ் TV” யூட்யூபில் தினந்தோறும் நேரலையில் ஒளிபரப்புசெய்து வருவதைக் குறிப்பிட்டு, இது உலகெங்கிலுமுள்ள கம்பனின் ரசிகர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

