Tuesday, March 24, 2026
HomeUncategorizedபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் ஷாக்!

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் ஷாக்!

பங்குச்சந்தை நிலவரம் 
இந்திய பங்குச்சந்தை நேற்று முன்தினம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கு நேர் மாறாக நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரியுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகபட்சமாக 679.42 புள்ளிகள் வரை சரிந்து 82 ஆயிரத்து 47 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியில் 542 புள்ளிகள் 0.66% சரிந்து, 82 ஆயிரத்து 184 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

 தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 157 புள்ளிகள் சரிந்து 25,62 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. இந்தியா இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது,  முதலீட்டாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments