Thursday, February 5, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 9 ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 9 ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 9 ஆம் நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகர் மன்றம் “தமிழ்ச்செம்மல்”ரா.சம்பத் குமார் (நகர்மன்றம்) அரங்கில் 26-7 -2025  வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்றது.  

   முதல் அமர்விற்கு செந்தில் மருத்துவமனை டாக்டர் எஸ் சுப்பையா அவர்கள்  நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். 

       விழா குழு உறுப்பினர் திரு.காசி ராஜேந்திரன்   அவர்கள் வரவேற்புரையும், 
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு ஐ . இருளப்பன் வாழ்த்துரை வழங்க,  சம்ஸ்கார் பாரதி மாவட்ட அமைப்பாளர்  திருமதி. அனுராதா சீனிவாசன் தொகுப்புரை செய்தார். 

நிகழ்ச்சியின்  முக்கிய அங்கமாக “சீதா கல்யாணம்” என்கிற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் புதுக்கோட்டையில் 50 நடன கலைஞர்கள்  பங்கேற்று நடனம் ஆடி நிகழ்ச்சியை திறம்பட சிறப்பித்தனர். 

kamban kazhagam

  நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு  குழந்தைகளையும் புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களும்  அழைத்து கெளரவித்தனர். 

    இரண்டாவது அமர்வில் முன்னாள் அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையேற்று பேசும்போது, “புதுக்கோட்டை கம்பன் கழக மேடையில் பேசுவது என்றால் பெரும்பாக்கியம் என்றும், இது எல்லோரும் பெருமை அடைகிறோம்” என்று பாராட்டிப் பேசினார்.

          “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்கிற பொருளில்  “கம்பன் மாமணி இலங்கை திரு.இ. ஜெயராஜ்  அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார். 
    புதுக்கோட்டை மாநகரின் முக்கிய பிரமுகர்கள்  பலரும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

       நிகழ்ச்சியில் நிறைவில்  ஆத்மா யோகா மையம்  யோகா திருமதி புவனா பாண்டியன் அவர்கள்  நன்றி உரை ஆற்றினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments