Sunday, March 22, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 10ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 10ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் “கம்பன் பொன் பெருவிழா”வின் 10 ஆம் நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகர் மன்றம் “தமிழ்ச்செம்மல்”ரா.சம்பத் குமார் (நகர்மன்றம்) அரங்கில் 27-7 -2025  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.  

   முதல் அமர்விற்கு அவர்கள்  நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்றார். 

   சிறப்புவிருந்தினராக ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் சேர்மன் திரு. தி.சு.ம.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

   இவ்விழாவிற்காக கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உழைத்துவரும் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலாளர் புதுகை.ச. பாரதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் கெளரவப்படுத்தினார்.  மேலும், ஊடக வியலாளர்கள் முதல் அரங்கத்தினை பத்து நாட்களும் பராமரித்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து கெளரவப் படுத்தினர். இதுமட்டுமின்றி புதுகை கம்பன் கழகத்தைத் தோற்றுவித்து தொடர்ந்து வழி நடத்திய முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறையின் குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து சிறப்பு செய்தனர். 

    அதையடுத்து  “இலங்கையின் திலகமாய்த்  திகழ்ந்த பாத்திரம் கும்பகர்ணனா?  வீடணனா இந்திர ஜித்தனா?”  என்கிற தலைப்பில்  “சொல்லரசி”.திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் நடுவராக பங்கேற்ற  பட்டிமண்டபம் நடைபெற்றது.

   “கும்பகர்ணனே!” அணியில் மதுரை. முனைவர்.ரேவதி சுப்புலெட்சுமி, காரைக்குடி திரு.யோகேஷ்குமார்,  “வீடணனே!” அணியில் ராஜபாளையம் திரு.ராஜ்குமார்,  சென்னை திருமதி. தெய்வானை மணிகண்டன்,  “இந்திரஜித்தனே!” அணியில் ராஜபாளையம் திருமதி. கவிதா ஜவஹர்  திருப்பூர்.ஆடிட்டர்.திருமதி. தெய்வநாயகி கார்த்திகேயன் ஆகியோர் வாதிட்டனர். 

  விழா நிறைவில் புதுகை  கம்பன் கழகப் பொருளாளர்.  திரு.கறு.ராமசாமி அவர்கள் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments