திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் க்யூ ஆர் கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பிச்சை கேட்கும் பொழுது யாராவது சில்லரை இல்லை என்று சொன்னால் க்யூ ஆர் கோடை காட்டி அதில் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துங்கள் என்று கூறுகிறார். இதை கண்ட பலரும் டிஜிட்டல் முறையில் அவருக்கு பிச்சை போட்டு வருகின்றனர்.
இதை கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர் அதற்கு அவர் தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது பர்சில் பணம் வைத்துக் கொள்வது அரிதாக உள்ளதால், அவர் தன் 3 வங்கி ஏடிஎம் கார்டுகள் வைத்திருப்பதாகவும், க்யூ ஆர் கோடு அட்டையை வைத்துக் கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதாகவும் இதனால் டிஜிட்டல் முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

