பாரத பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறோம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மற்றும் 4 தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் மற்றும் 2 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ( நயினார் நாகேந்திரன் மற்றும் M.R. காந்தி) இணைந்து சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டனர்
அப்போது செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன் :-
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி ஜனதா கட்சி பெற்றுள்ளது
தமிழகத்தில் கை ஊன முடியாது கால் ஊன முடியாது தாமரை வளர வாய்ப்பே இல்லை என அனைத்து எதிர்க்கட்சிகளும் தெரிவித்த வந்த நிலையில் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் பெற்றுள்ளோம்
பாரத பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக டெல்லி புறப்படுகிறோம் இதனுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறோம் என்று அவர் கூறினார்…

