Sunday, March 22, 2026
Homeசெய்திகள்பேசுபொருளாக மாறியிருக்கும் TVK செயலி! பின்னணியில் இருப்பது யாருனு தெரியுமா?

பேசுபொருளாக மாறியிருக்கும் TVK செயலி! பின்னணியில் இருப்பது யாருனு தெரியுமா?

தமிழக வெற்றி கழகம் (தவெக) இன்று அறிமுகப்படுத்திய MyTVK செயலியை வடிவமைத்த Samasthan Infotech Private Limited நிறுவனத்தின் பின்னணியில், பாஜக பிரமுகர்  சுப்ரமணியம் முத்துசாமி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நிறுவனத் தகவல்களை வழங்கும் வலைத்தளங்களான ZaubaCorp மற்றும் Tofler ஆகியவை Samasthan Infotech Private Limited நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக முத்துசாமி சுப்ரமணியம் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

 சுப்ரமணியம் முத்துசாமி, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியப் பிரமுகராக அறியப்படுகிறார். இவர் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியிலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் புதியதாகப் பிரவேசித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் செயலி வெளியீடு, அதன் பின்னணியில் ஒரு பாஜக பிரமுகரின் நிறுவனம் இடம்பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments