Thursday, February 5, 2026
Homeசினிமா46 வயது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் விஜய் பட நடிகை!

46 வயது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் விஜய் பட நடிகை!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. அவரை சுற்றி பல சர்ச்சையான விஷயங்கள் உலா வந்தாலும், யோகா, உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மறப்பதில்லை. 50 வயதிலும் தனக்கென  ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

 இந்நிலையில் 46 வயதாகும் தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் வேலையில் இறங்கியுள்ளார் ஷில்பா. ஷில்பாவின் தங்கையான ஷமிதா செட்டியும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளதாக  ஷில்பா ஷெட்டி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Shilpa, shamitha

 அவர் கூறி இருப்பதாவது, “இதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை, நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேட்பேன். எனது தங்கைக்காக தான் இதை கேட்கிறேன் என அவர்களிடம் சொல்வேன். இதை விட கொடுமை என்னவென்றால் டேட்டிங் தொடர்பான செயலையில் சேர்ந்து கொள் என்று கூட என் தங்கையிடம் சொல்லி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments