Wednesday, February 4, 2026
Homeஆன்மீகம்சந்திர கிரகணம்: செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்!

சந்திர கிரகணம்: செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்!

சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவுப்பு வெளியிட்டது. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவுப்பு சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.50மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 1.31மணி வரை கிரகணம் நீடிக்கும். எனவே சந்திர கிரகணத்துக்கு 6மணி நேரத்துக்கு முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3.30மணிக்கு கோயில் மூடப்படும். சுத்தம் செய்து கிரகண தோஷம், நிர்வாண பூஜைக்கு பிறகு செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.

பக்தர்களுக்கான தரிசனம் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கும். சந்திர கிரகணம் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமலையின் உள்ள வெவ்வேறு இடங்களில் அன்னபிரசாதம் விநியோகம், தரிகொண்டா அன்னபிரசாதம் வளாகம், வைகுண்டம் காத்திருப்பு வளாகம் மற்றும் அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3மணி முதல் அன்னபிரசாதம் வழங்குவது நிறுத்தப்படும்.

இருப்பினும் அன்னபிரசாதம் பிரிவு சார்பில் ராம பார்க்கிசிய யாத்திரம், சமூக கூடம், CRO அலுவலகம், ANC பகுதிகளில் பக்தர்களுக்கு 30,000 அன்னபிரசாதம் பாக்கெட்டுகளும் விநியோகிக்கபடும். பக்தர்களும் அன்னபிரசாதம் மீண்டும் வழக்கம்போல் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 8.30மணி முதல் மீண்டும் தொடங்கும் எனவே பக்தர்கள் சிரமங்களை தவிர்க்க திருமலைக்கு தங்கள் யாத்திரியை அதற்கேப்ப திட்டமிடுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரா கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.50மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3.31மணி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments