சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அலுவலகக் கதவின் மேல் பகுதியில் சிறிய சிவப்பு நிறத் துணி கட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு தலைமைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள அமைச்சர் அறையின் பிரதான மரக்கதவின் நடுவில் இவ்வாறு சிவப்புத் துணி தொங்கவிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, மூடநம்பிக்கை அல்லது கண் திருஷ்டி கழிப்பதற்காகவே இது கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன; பகுத்தறிவு வழியில் செயல்பட வேண்டிய அரசு நிர்வாக மையத்தில் இத்தகைய ஆன்மீக/மூடநம்பிக்கை சார்ந்த குறியீடுகள் பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த சிவப்புத் துணி அங்கு கட்டப்பட்டதற்கான சரியான காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

