Wednesday, February 4, 2026
Homeலைஃப்ஸ்டைல்இரவில் தினம் ஒரு ஏலக்காய்.. என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

இரவில் தினம் ஒரு ஏலக்காய்.. என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

இரவில் உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் பழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகள் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள் அவற்றுள் முக்கியமான நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

 ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

 ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ஏலக்காய் உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும்.  இதய  ஆரோக்கியத்திற்கு வளம் சேர்க்கும்.

 ஏலக்காயில் இருக்கும் காரத்தன்மை வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும். அசிடிட்டி நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். குறிப்பாக இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் மந்த நிலையில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும்.

 தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். இருமல், மூச்சு திணறல் மற்றும் சுவாச கஷ்டங்களை தடுப்பதிலும் பயனுள்ளதாக அமையும் 

 ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிற்று வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏலக்காயை  மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.

 ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும்.

 ஏலக்காயில் இருக்கும் டையூரிக் பண்புகள் உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். சிறுநீரகங்கள் சுத்தப்படுத்தவும் துணை புரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். இப்படி பல நன்மைகளை தரக்கூடிய இந்த ஏலக்காய் தினமும் பயன்படுத்தி இயற்கை முறையில் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments