Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்.. ஆக்ஷன் அத்தியாயம். 58. இயக்குனர். பாலு மகேந்திரா- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன் அத்தியாயம். 58. இயக்குனர். பாலு மகேந்திரா- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன்

அத்தியாயம். 58.

இயக்குனர். பாலு மகேந்திரா.

மூன்றாம் பிறைதிரைப் படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படைப்பு! கமல்ஹாசன் அவர்களும் ஸ்ரீதேவி அவர்களும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜொலித்த படம்!..

பாலு மகேந்திரா அவர்கள் ஒளிப்பதிவிலும் படத் தொகுப்பிலும் இயக்கத்திலும் முத்திரை பதித்த படம்!. இளையராஜா அவர்களின் அற்புதமான பாடல்கள்!

கவியரசு கண்ணதாசன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் எழுதிய கடைசி பாடல் கண்ணே கலைமானே’.. என்றும் மறக்க முடியாத  காவியமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

பற் பல விருதுகள் குவித்த படம்!..சிறந்த ஒளிப்பதிவதற்கான தேசிய விருதை பாலு மகேந்திரா அவர்களுக்கு வாங்கித் தந்த படம்.

பல விதமான கதை கருக்களை கையாண்டு அழுத்தமான படங்கள் மட்டுமல்லாமல் வியாபார ரீதியான படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்களை தந்தவர் பாலு மகேந்திரா அவர்கள்!

அவர் இயக்கிய வீடு’.. ‘சந்தியா ராகம்’… ‘வண்ண வண்ண பூக்கள் இவையெல்லாம் தேசிய விருதுகளை வாங்கிய திரைப் படங்கள்!

ரெட்டைவால் குருவி என்ற நகைச்சுவை திரைப் படத்தை தந்தவர் மறுபடியும் என்ற கவித்துவமான திரைப் படத்தையும் தந்து ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை சிக்க வைத்துக் கொள்ளாமல் திரையுலகில் பயணித்தார்!..

அவரே முக்கிய வேடத்தில் நடித்த தலைமுறைகள் திரைப்படம் 2013 இல் வெளியானது!

23திரைப்படங்களை ஐந்து மொழிகளில் இயக்கியிருக்கிறார்! அவற்றில் 21 படங்களுக்கு இளையராஜா அவர்களே இசை அமைத்திருக்கிறார்!

குறைந்த கதாபாத்திரங்களோடு பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி அவர் படைத்த திரைப் படங்கள் என்றென்றும் நிலைக்கும் காவியங்கள்!

சின்னத் திரையிலும் பாலு மகேந்திராவின் கதை நேரம் என்ற தொடர் மூலம் பெரும் பாராட்டுகளைப் பெற்றார்!

சினிமா பட்டறை என்ற திரைப்படக் கல்லூரியை நிறுவி எதிர்கால சந்ததியினருக்கு வழி அமைத்துக் கொடுத்தார்!

இன்று திரையுலகில் வெற்றி பெற்று வலம் வரும் இயக்குனர்கள் பாலா சீனு ராமசாமி ராம் மற்றும் வெற்றி மாறன் இவர்களெல்லாம் அவரது சிஷ்யர்கள்..

அவரது பெயரை தங்கள் படைப்புகளின் மூலமாக வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள்! பாலு மகேந்திரா அவர்களின் திரைப்படங்கள் திரையுலகுக்கு சிறந்த புத்தகங்கள்!

– இயக்குநர் நித்தியானந்தம்

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments