Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்தவெக விஜய் பிரச்சார சொகுசு பஸ்சுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன? வாங்க பாக்கலாம்!

தவெக விஜய் பிரச்சார சொகுசு பஸ்சுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன? வாங்க பாக்கலாம்!

சமீபத்தில் தவெக கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் பேச்சு பொருளாக மாறி உள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரச்சார பேருந்து மோதி இரண்டு வாலிபர்கள் கீழே விழுந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகின்றது.

 இது தொடர்பாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பிரச்சார வாகனத்தில் இருக்கக்கூடிய சிறப்பு அம்சங்கள் பற்றியும், அந்த பேருந்துகள் இருக்கக்கூடிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

*இதுவரையிலும் பிரச்சாரத்திற்காக யாரும் இவ்வளவு  பெரிய வசதியான பஸ் வைத்திருக்கவில்லை. இத்தனை பெரிய பஸ்சில் ரசிகர்கள் தன்னைப் பார்ப்பதற்கு மிகச் சின்னதா கண்ணாடிக் கதவு வைத்திருக்கிறார் விஜய்.

தன் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்பதை முழு தனி கவனம் எடுத்து இந்த பிரச்சார பஸ்சை வடிவமைத்திருக்கிறார் விஜய்.

இந்த பஸ் முழுக்க முழுக்க விதிமீறலுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கரூர் சம்பவம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரையின் போது விதிமீறலுக்கு உள்ளாகி இருக்கிறது இந்த பஸ். இதனால் நீதிமன்ற உத்தரவின் படி காவல்துறை இந்த பஸ்சை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

*கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன

*அந்த பஸ்சின் நீளம் 33 அடி.  அகலம் 12 அடி, உயரம் 11 அடி

*பஸ் முழுவதும் குளிர்சாதன வசதி

*விஜய் ஓய்வெடுக்க மினி பெட்ரூம்

*5 சொகுசு நாற்காலிகள்

*2 பேர் அமரும் வகையில் 2 சொகுசு நாற்காலிகள் – இதில் விஜய் , ஆதவ் அர்ஜூனா உட்காருகிறார்கள் 

*பெரிய டிவி, ரெப்ரிஜெரேட்டர்

*கழிவறை, குளியலறை

*ஒப்பனை அறை

*பெட்ரூம்

*ஓட்டுநர் ஓய்வறை

*கை கழுவுமிடம்

*மினி ஹால், ஷோபா, டீ டேபிள்

*பஸ்சின் வெளிப்புறத்தில் 8 கே சிசிடிவி கேமராக்கள்

*மினி கிச்சன்

*டைனிங் டேபிளுடன் சாப்பிடுமிடம்

*சுடச்சுட ஸ்நாக்ஸ், தேநீர் மற்றும்  ஜூஸ் ரெடி செய்து கொடுக்க சமையல்காரர்

*ரூ.1.25 கோடியில் ஜேசிபிஎல் நிறுவனம் இந்த பஸ்சை தயாரித்துள்ளது

*சினிமா படப்பிடிப்பு தளங்களில் 10 பேர் ஓய்வெடுக்கப் பயன்படுத்தும் பஸ் இது.  இவ்வளவு பெரிய பஸ் விஜய்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments