90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று காலை நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

