Wednesday, February 4, 2026
Homeவிளையாட்டுதடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மீண்டும் தடை விதிப்பு!

தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மீண்டும் தடை விதிப்பு!

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை விதிப்பு..

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், போதைப் பொருள் பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் புகாரில் சிக்கி 8 ஆண்டுகள் தடைபெற்றுள்ளார்.இந்தியாவின் மிக வேகமான ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவர். 2021-ல் நடந்த ஃபெடரேஷன் கோப்பை தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார். மேலும், தேசிய அளவிலான இந்த போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை முறியடித்து தங்கம் வென்றதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments