மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க https://madurai.nic.in/jallikattu/ இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும்.
முன்பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியானவர்களுக்கு டோக்கன் தரப்படும்.
மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15, பாலமேடு ஜனவரி 16, அலங்காநல்லூரில் ஜனவரி 17இல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது

