நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்… இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!” இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா என்பது சந்தேகமே !
தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன.
அவர்தான் தமிழக மக்களால் புரட்சித் தலைவர், இதயக்கனி, மக்கள் திலகம், வாத்தியார் என அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தில் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று அதை நோக்கி நகர்ந்து சாதித்தவர்கள் இரண்டே பேர் தான்.
ஒருவர், பேரறிஞர் அண்ணா.
இரண்டாவது, இன்று 109 பிறந்த நாள் கொண்டாடும் எம்.ஜி.ஆர்.

