Wednesday, March 18, 2026
Homeஉலகம்எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் Dislike button அறிமுகம்!

எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் Dislike button அறிமுகம்!

எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் , பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான ‘டிஸ்லைக்’ (Dislike) பட்டன் வசதி தற்போது சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தலைமையிலான இந்த நிறுவனம், பயனர்கள் தங்களுக்குப் பிடிக்காத அல்லது தேவையற்ற பதிவுகளைக் கண்டறியவும், தரமான உரையாடல்களை ஊக்குவிக்கவும் இந்த ‘டவுன்வோட்’ (Downvote) முறையைக் கொண்டு வந்துள்ளது.

ஒரு பதிவின் கீழே உள்ள இந்த டிஸ்லைக் பட்டனை அழுத்தினால், அந்தப் பதிவின் தரம் குறைந்து மற்றவர்களின் பார்வைக்குச் செல்வது கட்டுப்படுத்தப்படும். இருப்பினும், யூடியூப் தளத்தைப் போலவே இந்த டிஸ்லைக் எண்ணிக்கை பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாது.

இது அல்காரிதம் மூலம் பதிவுகளின் தரத்தை வரிசைப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றம் எக்ஸ் தளத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்குமா அல்லது தேவையற்ற வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு வழிவகுக்குமா என்ற விவாதம் தற்போதே இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments