Saturday, March 21, 2026
Homeசெய்திகள்பாஜக மும்பை தெற்குப் பிரிவு தலைவராக (தமிழர்) முருகன் நியமனம்! யார் இவர்?

பாஜக மும்பை தெற்குப் பிரிவு தலைவராக (தமிழர்) முருகன் நியமனம்! யார் இவர்?

மும்பை பாஜகவில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மும்பை தெற்குப் பிரிவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மும்பையில் வாழும் தொழிலதிபர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மும்பை பாஜக தலைவர் அமித் சதாமால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொறுப்பை ஏற்றப்பிறகு, அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஆஷிஷ் ஷேலார் மற்றும் மும்பை தலைவர் அமித் சதாம் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இவர் நீண்ட காலமாக மும்பையில் வசிக்கும் தமிழர்களுக்காகவும், அங்குள்ள பாஜகவின் வளர்ச்சிப்பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments