Thursday, May 7, 2026
Homeசெய்திகள்ரிசார்ட் பாலிடிக்ஸ் உச்சம்! அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘பாதுகாப்பு வளையத்தில்’?

ரிசார்ட் பாலிடிக்ஸ் உச்சம்! அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘பாதுகாப்பு வளையத்தில்’?

தமிழக அரசியலில் தற்போது ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’ உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி. சண்முகத்தின் ஏற்பாட்டின் பேரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதிமுக எம்.எல்.ஏ-க்களில் ஒரு தரப்பினர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது.

குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரும் டிவி கே-விற்கு ஆதரவாகவோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிப்பதையோ தவிர்க்கவே இந்த ‘கூண்டுக்குள் வைக்கும்’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

“வெளியே போனால் விழுங்கிவிடுவார்கள்” என்ற பயத்தில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களையே இப்படிப் பத்திரமாகப் பூட்டி வைத்திருப்பது, ஜனநாயகத்தின் அழகை ஊருக்கே பறைசாற்றுவது போல் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு பக்கம், இருக்கும் பதவியைக் காப்பாற்ற ஒரு பக்கம் எனத் தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பெரும் ‘சீட்டுக்கட்டு’ விளையாட்டாகவே மாறிவிட்டது!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments