Wednesday, May 13, 2026
Homeசெய்திகள்நம்பிக்கை வாக்கெடுப்பில் பரபரப்பு... ஆளும் கட்சிக்கு எதிராக எடப்பாடி கடும் குற்றச்சாட்டு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பரபரப்பு… ஆளும் கட்சிக்கு எதிராக எடப்பாடி கடும் குற்றச்சாட்டு!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (மே 13) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயரை முன்னிறுத்தி 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தரப்பினர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது எவ்வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் தருவதாகக் கூறி ‘குதிரை பேரம்’ நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்று எச்சரித்தார்.

மேலும், அதிமுகவின் அடித்தளமே தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தாங்கள் ‘எதிரி’ கட்சியாக அல்லாமல், ஒரு பொறுப்பான ‘எதிர்க்கட்சியாக’ மட்டுமே செயல்படுவதாகத் தெரிவித்தார்.

தூய்மையான ஆட்சி தருவேன் என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர், அதை எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments