Thursday, May 14, 2026
Homeஉலகம்23 வயதில் பில்லியனர்: மார்க் சக்கர்பெர்கின் வெற்றிக் கதை!

23 வயதில் பில்லியனர்: மார்க் சக்கர்பெர்கின் வெற்றிக் கதை!

சமூக வலைதள உலகின் சக்கரவர்த்தியாகவும், உலகத்தையே ஒரு மெய்நிகர் குடைக்குள் கொண்டு வந்த ஃபேஸ்புக் (Facebook) நிறுவனத்தின் நிறுவனருமான மார்க் சக்கர்பெர்க், 1984-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயதிலேயே தந்தையின் மருத்துவமனைக்காகச் சிறப்பு மென்பொருளை உருவாக்கிய மார்க், 2004-இல் ஹார்வர்டு பல்கலைக்கழக விடுதி அறையில் ஒரு விளையாட்டாகத் தொடங்கிய ‘ஃபேஸ்மேஷ்’ காலப்போக்கில் உலகை ஆளும் ‘தி ஃபேஸ்புக்’ ஆக உருவெடுத்தது.

நிறக்குருடு பாதிப்பு காரணமாக இவர் நீல நிறத்தைப் பிரதானமாகக் கொண்டு வடிவமைத்த இந்தத் தளம், இன்று பல கோடிப் பயனாளர்களை அடிமையாக்கி வைத்திருப்பதோடு, தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் சட்டச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறது.

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களின் சாதனைகளை மிகக் குறைந்த வயதிலேயே முறியடித்து, 23 வயதில் பில்லியனர் மற்றும் 26 வயதில் டைம் இதழின் ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ எனப் புகழ்பெற்ற மார்க், இணைய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்கிறார்.

காலமாற்றத்தில் பல சவால்களைச் சந்தித்தாலும், உலகளாவிய தகவல் தொடர்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய இந்தத் தொழில்நுட்ப மேதைக்கு இன்று பிறந்தநாள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments