சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியாகின. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட (88.39%) குறைந்து 85.20% ஆகப் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மண்டலங்களில் திருவனந்தபுரம் 95.62% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது; அதனைத் தொடர்ந்து சென்னை மண்டலம் 93.84% தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அதே சமயம், பிரயாக்ராஜ் மண்டலம் 72.43% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் (88.86%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மத்தியில் 82.13% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திருநங்கை மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் தேவையற்ற போட்டியைத் தவிர்க்கும் விதமாக, இந்த ஆண்டும் ரேங்க் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

