Saturday, May 16, 2026
Homeசெய்திகள்ஆளுநரை சந்தித்த முதல்வர் விஜயின் முதன்மைச் செயலாளர்… இலாகா ஒதுக்கீடு பட்டியல் ரெடியா?

ஆளுநரை சந்தித்த முதல்வர் விஜயின் முதன்மைச் செயலாளர்… இலாகா ஒதுக்கீடு பட்டியல் ரெடியா?

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலாளரும் (செயலாளர்-1) மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் பி. செந்தில்குமார், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பின் போது, ஏற்கனவே முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களுக்கு எந்தெந்தத் துறைகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பரிந்துரைக் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு, புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், புதிய ஆட்சி நிர்வாகம் மிக வேகமாகத் தன் பணிகளைத் தொடங்கியுள்ளதையே இந்தத் திடீர் சந்திப்பு காட்டுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments